Home / NCC / 73rd Independence Day-15 August 2019

73rd Independence Day-15 August 2019

               

73 ஆவது விடுதலை நாள் விழா கொண்டாட்டம்.

                                   பாளையங்கோட்டை கிறிஸ்துராஜா மேல்நிலைப்பள்ளியில்  73-வது விடுதலை நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியர் I.ஆரோக்கியம் விழாவிற்கு தலைமை ஏற்று நாட்டு கொடியினை ஏற்றிவைத்தார். தேசிய மாணவர் படை, சாரணர் இயக்கம், செஞ்சிலுவைச் சங்கம் சார்ந்த மாணவர்கள் கண்கவர் அணிவகுப்பு நிகழ்த்திக் காட்டினர்.

                                 விடுதலைக்காக உழைத்த பெரியவரை வாழ்த்தி பல்வேறு வகையான கலை நிகழ்வுகளை மாணவர்கள் நடத்தி காட்டினர். விடுதலை நாள் விழாவிற்காக மாணவர்களிடையே கல்வி வளர்ச்சி சார் இயக்கங்கள் சார்பாக பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி, பாராட்டி விடுதலை நாள் விழா பேருரையை தலைமை ஆசிரியர் சகோதரர் I.ஆரோக்கியம் அவர்கள் வழங்கினார். விழாவில் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. விழாவிற்கான அனைத்து நிகழ்வுகளையும் உதவி தலைமை ஆசிரியர் சகோ A. இன்னாசி இனிகோ அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். 

 

 
 

0 Comments

You can be the first one to leave a comment.

 
 

Leave a Comment